ETV Bharat / state

சந்தன மரம் கடத்திய இருவருக்கு அபராதம்: இருவர் தப்பியோட்டம்! - சர்க்கார்போரத்தி கிராம வனப்பகுதியிலுள்ள சந்தன மரங்கள் கடத்தல்

கோவை: வனப்பகுதியில் சந்தன மரங்களை கடத்திய இருவருக்கு அபாராதம் விதித்த காவல் துறையினர், கேரளாவைச் சேர்ந்த மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

2 youngster fined for sandalwood smuggling
2 youngster fined for sandalwood smuggling
author img

By

Published : Dec 20, 2019, 11:57 AM IST

கோவை மாவட்டம் சாடிவயல் வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைச்சாரலிலுள்ள இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள், விலை மதிப்புள்ள சந்தனம், தேக்கு உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. வனப்பகுதியிலுள்ள சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி வெட்டி கடத்தி வருகின்றனர். இதனைத் தடுக்க போளுவாம்பட்டி வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், கேரளாவிலிருந்து வரும் சில நபர்கள் இந்தச் சந்தன மரங்களை வெட்டிகொண்டு செல்வது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சர்க்கார்போரத்தி கிராம வனப்பகுதியிலுள்ள சந்தன மரங்களை சில நபர்கள் கடத்திச் சென்றதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலுவம்பட்டி வனத்துறையினர் சர்க்கார்போரத்தி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரகு, ரங்கசாமி ஆகிய இருவரும் சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ரகுவையும் ரங்கசாமியையும் பிடித்து விசாரணை செய்த வனத்துறையினர், அவர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், வனத்துறையினர் அவர்கள் இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். எஞ்சியுள்ள மரத் துண்டுகளை கேரளாவைச் சேர்ந்த நபர்கள் எடுத்துச் சென்றதால் வனத்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர். உறவினர்கள் மலைப்பகுதியில் உள்ளதால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு கிராமத்திற்கு வரும் நபர்கள் சந்தன மரங்களை கடத்துவதால் வனத்துறையினர் மலை கிராமங்களுக்கு வருவோரை தணிக்கை செய்து அனுப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பழைய இரும்பு பொருள்கள் 25 டன் திருடிய மூவர் கைது!

Intro:மலை கிராமங்களுக்கு விருந்தினர்கள் போல் வந்து சந்தன மரங்களை வெட்டிச் செல்லும் கேரளாவைச் சேர்ந்த சந்தன மர கடத்தல் கும்பலை பிடிக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்Body:கோவை மாவட்டம் சாடிவயல் வனப்பகுதி சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் விலை மதிப்புள்ள சந்தனம் தேக்கு உள்ளிட்ட மரங்கள் அதிக அளவில் உள்ளன. வனப்பகுதியில் உள்ள இந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் அடிக்கடி வெட்டி கடத்தி வருகின்றனர். இதனைத் தடுக்க போளுவாம்பட்டி வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் எனினும் ஆதிவாசி மக்கள் சிலரின் உதவியுடன் கேரளாவிலிருந்து வரும் நபர்கள் இந்த சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு செல்வது தொடர்ந்து வருகிறது இந்நிலையில் வெள்ள பதி பீட் பகுதியில் உள்ள சர்க்கார்போரத்தி ஆதிவாசிகள் கிராமத்தின் அருகே வனப்பகுதியில் உள்ள 4 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்திச் சென்றதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலுவம்பட்டி வனத்துறையினர் சர்க்கார்போரத்தி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நான்கு பேர் இந்த சந்தன மரங்களை வெட்டியது தெரியவந்தது, இதில் கேரளாவைச் சேர்ந்த இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ,ரகு, ரங்கசாமி இருவரும் இந்த சந்தன மரக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது இதனையடுத்து இந்த இருவரையும் வனத் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது மீதம் உள்ள மர துண்டுகளை கேரளாவைச் சேர்ந்த நபர்கள் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர் கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை தேடி வருகின்றனர் உறவினர்கள் மலைப்பகுதியில் உள்ளதால் அதனை பயன்படுத்திக் கொண்டு கிராமத்திற்கு வரும் நபர்கள் இந்த சந்தன மரங்களை வெட்டுவதால் வனத்துறையினர் மலை கிராமங்களுக்கு வருவோரை தணிக்கை செய்து அனுப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.