ETV Bharat / state

ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு சென்னை சிறுவர்கள் பலி - அம்பராம்பாளையம் ஆறு

பொள்ளாச்சி: அம்பராம்பாளையம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சென்னையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் பலி
author img

By

Published : May 12, 2019, 9:35 AM IST

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் ஞானவேல். இவர் தனது மனைவி ஜெயசுதா மற்றும் உறவினர்களுடன் நேற்று பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார். பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆற்றில் நேற்று குளிக்க சென்றுள்ளனர்.

ஆற்றில் ஞானவேல் உட்பட அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நான்கு சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். அதைக் கண்ட குடும்பத்தினர் மற்றும் அருகிலிருந்த பொதுமக்களும் நிச்சல் அடித்து அந்த நான்கு சிறுவர்களையும் மீட்டனர். எனினும் கிரித்திஷ் கண்ணன் மற்றும் அஸ்வந்த் ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மயக்க நிலையில் இருந்த மார்ட்டின் எட்வர்ட், ஹரிதாஸ் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆனைமலை காவல்துறையினர் இறந்த சிறுவர்களின் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம்  ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த கிரித்திஸ் கண்ணன், அஸ்விந்த் என்ற இரண்டு சிறுவர்கள் பலி இருவர் மருத்துவமணையில் அனுமதி குடும்பத்துடன் சுற்றுலா வந்தவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்
பொள்ளாச்சி : மே.11
சென்னை அமந்தகரையை  சேர்ந்தவர் ஞானவேல் இவரது மனைவி ஜெயசுதா இவர்களின்  உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருடன் 26 பேர் நேற்று சென்னையில் இருந்து மூணாறு சுற்றுலா செல்வதற்காக வேனில் வந்தனர் இன்று பிற்பகல் பொள்ளாச்சி அருகே உள்ள  அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர் அப்போது சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நான்கு சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர் அப்போது அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் நீரில் மூழ்கிய 4 பேரையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர் இதில் கிரித்திஷ் கண்ணன் மற்றும் அஸ்வந்த் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் மார்டின் எட்வர்ட், மற்றும் ஹரிதாஸ் இரண்டு பேரும் மயக்க நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆனைமலை போலீசார் இறந்த சிறுவர்களின் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் சுற்றுலாவுக்காக வந்தபோது சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் உறவினர்கள்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றபோது அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆழமான பகுதி அங்கு குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர் ஆனால் அதையும் மீறி விளையாட்டுத்தனமாக சிறுவர்கள் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது இதனால் உயிரிழ்ப்பு  ஏற்பட்டுள்ளது நீரில் மூழ்கியவர்களை முடிந்த வரை போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.