கோவையில் போதை பொருள் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் தலைமையில் காவல் ஆய்வாளர் சரவணன், காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் மாநகர் முழுவதும் போதைப்பொருள் விற்பனை குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காவலர்களுக்கு ஒண்டிப்புதூர் பகுதியில் வசிக்கும் சிங்கம் (40), பாண்டியம்மாள் (33) தம்பதியினர் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்களிடமிருந்து 1,200 கிலோ சராஸ், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: 'ஒருபுறம் நரசிம்மர்! மறுபுறம் ஆஞ்சநேயர்!' - சிலைக்குள் ஒளிந்துள்ள கலை