சென்னை: பப்ஜி விளையாட்டின் மூலம் ஆபாச பேச்சுக்களால் இளைய சமுதாயத்தினரை தவறாக வழிநடத்துவதாக யூடியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. அதனடிப்படையில் மதன், அவரது மனைவி கிருத்திகா ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் கிருத்திகா ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து 32 புகார்களின் அடிப்படையில் மதன், அவரது மனைவி கிருத்திகாவுக்கு எதிராக 1,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று (செப்.13) மதன் அவரது மனைவி கிருத்திகா இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டு வழக்கு விசாரணை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?