ETV Bharat / state

சரியான மேடை அமைந்தால் சிறை சென்ற இளைஞரும் மெஸ்ஸியாக மாறுவார் - நீதிபதி பி.என்.பிரகாஷ் - பறவை அமைப்பு

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இளைஞர்கள் சிலர் முதன்முறை குற்றம் புரிந்திருந்தாலும், சரியான மேடை அமைத்துக்கொடுத்தால் நாளை அவர்களில் இருந்து 10 மெஸ்ஸி, 10 எம்பாப்பே உருவாக வாய்ப்புள்ளதாக, உயர்நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி
உயர்நீதிமன்ற நீதிபதி
author img

By

Published : Dec 22, 2022, 7:14 AM IST

சென்னை: முதல் முறை சிறிய குற்றங்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாகச் சிறைக்குச் செல்லும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் விதமாகச் சென்னை காவல்துறை, சமூக நல பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக் குழு மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் (PRISM) மூலம் ’பறவை’ என்ற திட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் முதன்முறையாகக் குற்றச் செயல்புரிந்து சிறைத் தண்டனை அனுபவிக்கும் சிறார்கள் மற்றும் இளைஞர்கள், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுத்து இத்திட்டம் மூலமாக அவர்களுக்கு மன ஆலோசனைகள், வருங்காலம் தொடர்பான ஆலோசனைகள், படிப்பறிவு, வேலை வாய்ப்பு போன்றவற்றை உருவாக்கிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் நரேந்திரன் நாயர் இத்திட்டத்தின் மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, அவரது மேற்பார்வையில் 30 சரகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி காவல் ஆய்வாளர் மற்றும் 30 காவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்த பணிகளானது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், துவங்கப்பட்ட பறவை திட்டம் குறித்து துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு விளக்கும் வகையில் சென்னை காவல் ஆணையரகத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்புகளும் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் பறவை திட்டத்தின் தொடர்ச்சியாக சைதாப்பேட்டை தாடாண்டர் நகரில் உள்ள மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் "சிறகுகள்" என்ற பெயரில் வழிகாட்டி மையத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பறவை ட்ராப் இன் சென்டர்
பறவை ட்ராப் இன் சென்டர்

இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டி மையத்தைத் துவக்கி வைத்தனர். இந்த சிறகுகள் வழிகாட்டி மையம் வாரம் தோறும் திங்கள் முதல் சனி ஆகிய 6 நாட்களும் மாலை 4-8 மணி வரை செயல்படும்.

மேலும் இந்த மையத்தின் மூலம் முதன்முறை குற்றம் புரிந்த 18 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த உதவிகளும், சட்டம் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகள், போதை மறுவாழ்வு, மனநல ஆலோசனை, கல்வி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் சட்டம் சார்ந்த உதவிகளும் தகுந்த வல்லுநர்கள் மூலம் வழங்கப்படும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டும், மாதம் ஒரு முறை ஞாயிற்றுக் கிழமைகளில் குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள், மனநல ஆலோசகர்களால் வடிவமைக்கப்பட்ட செயல்முறைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ”நாட்டிற்கு முன்மாதிரியான ஒரு திட்டத்தைக் கொண்டு வரும் வகையில் ’பறவை’ திட்டத்தை செயல்படுத்தி வெற்றிகாண திட்டமிட்டுள்ளது. சட்டத்தை அமல்படுத்துவது மட்டுமே காவல்துறையின் பணியில்லை, இதுபோன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடுவதன் மூலமே மாற்றங்களை கொண்டு வர முடியும். அதேபோல முதன்முறையாகக் குற்றம் புரிந்தவர்கள் தாங்கள் தவறான பாதையில் வந்துவிட்டோம், என்பதை மனதில் விதைத்து அந்த எண்ணத்தை வளர்த்தால், அதன் மூலம் காவல்துறை அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தும். இந்த திட்டத்தை வெற்றியடையச் செய்வது, திருந்தி வாழ முயல்பவர்களின் கையில்தான் உள்ளது” என தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ், ” ‘பறவை’ திட்டம் துவங்குவதற்கு முன் சைதாப்பேட்டை கிளைச் சிறையைப் பொறுத்தவரை 143 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் 24 கைது நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளது வெட்டவெளிச்சமாவதாக. இவர்களுக்குள் திறமைகள் ஒளிந்துகிடக்கிறது, இவர்களுக்கு சரியான மேடை அமைத்துக்கொடுத்தால் இவர்களின் திறமை வெளிப்படும். வருங்காலத்தில் இவர்களுள் 10 மெஸ்ஸி, 10 எம்பாப்பே வாக கூட வர வாய்ப்புள்ளது.அதுமட்டுமல்லாமல் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இவர்கள்தான் சமுதாயத்தை வழிநடத்தவுள்ளனர், இவர்களை குற்றவாளிகளாக்கி சிறையில் அடைப்பதைவிட, இவர்களைச் சமுதாயத்திற்குள் கொண்டு வந்து வாழவைக்கும் கடமை நமக்கு உள்ளது” என தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற முதன்முறை குற்றவாளிகளான இளைஞர்களிடையே பேசிய அவர் ”நீங்கள் உறுதியுடன் வாழ்க்கையில் நல்வழிப்பட முயன்றால், உங்களுக்காகக் கண்ணீர் விடவும், கைதட்டவும், வாழ்வை சீரமைக்கவும் நாங்கள் இருக்கிறோம். அடுத்த மாதம் ஓய்வுபெறவுள்ள நான், அதன் பிறகு மாலை நேரங்களில் உங்களுடன் விளையாடவுள்ளேன். உங்களுக்கு ரோல் மாடல் என ஒருவர் இருந்திருந்தாள் நீங்கள் குற்றவாளிகளாக மாறியிருக்க மாட்டீர்கள். நீங்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் ரோல் மாடல்களாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் மட்டுமே இப்படியொரு மாற்றம் நடைபெற்றுள்ளதென்றால், இந்த திட்டத்தைச் சென்னையைத் தாண்டி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என தமிழகம் முழுவதும் கொண்டுசென்றால், தமிழகம் அமைதிப்பூங்காவாக மாறும்” என கூறி இளைஞர்களுக்கு உத்வேக அளித்தார். நிகழ்ச்சியின் இறுதியாகக் குற்றச்செயலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று திரும்பி ’பறவை’ திட்டத்தின் மூலம் நல்வழிப்பட்ட இளைஞர் ஒருவர் தாயைப் பற்றி கானாப்பாடல் பாடி தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படிங்க: 'அஞ்சாத சிங்கம் என் காளை' - களம் காண தயாராகும் 12ஆம் வகுப்பு மாணவியின் ஜல்லிக்கட்டு காளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.