சென்னையைச் சேர்ந்த 17 வயதுடைய மனநலம் குன்றிய சிறுமி ஒருவர் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் பள்ளி சீருடை உடன் வழி தவறி சென்னை சென்ட்ரலுக்கு சென்றுள்ளார். அச்சிறுமியை கண்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த நரேந்திர சிங் (25) என்ற வாலிபர் சென்னை சென்ட்ரலில் இருந்து அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் அழைத்து வந்துள்ளார்.
சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்து அழைத்து வந்த நரேந்திர சிங் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைக்குள் அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட ரயில் பயணிகள் சிலர் இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அம்பத்தூர் போலீசுக்கு புகார் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு இளைஞரை பிடித்து விசாரித்தனர். அதில் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி வழி தவறி சென்ட்ரலுக்கு வந்ததாகவும், பீகாரை சேர்ந்த நரேந்திர சிங் (25) என்ற இளைஞர் சிறுமியை அம்பத்தூர் ரயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருந்து கழிவறையில் சில்மிஷம் செய்ததும் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நரேந்திர சிங்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்பத்தூரில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் காதல்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் கைது!