ETV Bharat / state

பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது! - தமிழ் குற்றச் செய்திகள்

சென்னை: இரண்டு வருடங்களாக 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Youth arrested for sexually harassing women's

author img

By

Published : Mar 2, 2021, 9:44 AM IST

சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வரக்கூடிய 20 வயது இளம்பெண் ஒருவர் வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அலறி போன இளம்பெண் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளில் அந்த இளைஞரின் இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அந்த இரு சக்கர வாகனம் பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த சரண்(21) என்பவருடையது என தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் சரணை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சரண் கடந்த 3 வருடத்திற்கு முன்பு கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, பூந்தமல்லியில் உள்ள நிதி நிறுவனத்தில் வசூல் முகவராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது பணம் வசூலிப்பதற்காக செல்லும் இடங்களில் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், நாளொன்றுக்கு 2 இளம்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சரண் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண்கள் மானத்திற்கு பயந்து புகார் அளிக்காமல் இருக்க வேண்டாம் எனவும் அவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: ஒருவர் கைது, 3 பெண்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.