சென்னை குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக தெற்கு கூடுதல் ஆணையர் தினகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சிட்லபாக்கம் காவல் நிலைய தனிப்படை காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று கண்காணித்தபோது இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது அவர் குரோம்பேட்டை கணபதி புரத்தைச் சேர்ந்த ராஜ் குமார் (22) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த சிட்லப்பாக்கம் காவல்துறையினர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க... 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 5 பேர் போக்சோவில் கைது!