ETV Bharat / state

கோயிலில் ஆபாசப் படம் பார்த்து தப்பியோடிய இளைஞர் கைது - youth arrested

கோயிலில் ஆபாசப்படம் பார்த்த இளைஞரைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவிலில் ஆபாச படம் பார்த்து தப்பியோடிய வாலிபர் கைது

author img

By

Published : Sep 25, 2022, 4:44 PM IST

Updated : Sep 25, 2022, 7:29 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. அங்கு கடந்த 19ஆம் தேதி இரவு கோயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது இளைஞர் ஒருவர் கோயிலில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துள்ளார்.

பின்னர் பார்த்த ஆபாசப் படத்தை அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் காண்பித்துள்ளார். இளைஞரின் இந்தச் செயல் கோயிலில் உள்ள சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் குருக்கள் பிரசாத் இது குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் கோயிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட அடையாளம் தெரியாத இளைஞர் மீது மத உணர்வைத் புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளங்களை வைத்து தப்பி ஓடிய இளைஞரைப் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, அருண் என்ற இளைஞரை, இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பாண்டிச்சேரியை சேர்ந்த அருண், திருவல்லிகேணி பகுதியில் மேன்சனில் தங்கி உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும், தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பதாகவும், அதுவரை பகுதி நேரமாக உணவு டெலிவரி பணி செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும் வேலைக்கான முடிவுகள் வர தாமதமானதால் மன அழுத்தத்தில் இருந்த நிலையில் சம்பவத்தன்று அதிகமாக மது அருந்தியதால் தலைக்கேறிய போதையில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஆபாச படத்தை செல்போனில் பார்த்ததாகவும் தன்னை விட்டுவிடும் படி தெரிவித்துள்ளான்.

கோயிலில் ஆபாசப் படம் பார்த்து தப்பியோடிய இளைஞர் கைது

மேலும் மது போதையில் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை தொலைத்துவிட்டு பாண்டிச்சேரி சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளான். இந்நிலையில் போலீசார் அருணை ஜாம்பஜார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழைப் புறக்கணிக்கிறதா சென்னை மாநகராட்சி? ; பொதுமக்கள் அதிருப்தி

Last Updated : Sep 25, 2022, 7:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.