ETV Bharat / state

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை - தற்கொலை

அம்பத்தூர் அருகே வரதட்சணை கேட்டு கணவர் அடித்து உதைத்ததால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வித்யாகுமாரி.

author img

By

Published : Jun 10, 2021, 7:01 AM IST

சென்னை அம்பத்தூர் பகுதி சக்தி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி வித்யாகுமாரி (27). இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன.

வித்யாகுமாரியின் பெற்றோர் திருமணத்தின்போது 13 சவரன் தங்க நகைகள், மாப்பிள்ளைக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.65000 பணம், சீர்வரிசைப் பொருள்கள் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பின்னரும் அடிக்கடி மூர்த்தி, தனது மனைவி வித்யாகுமாரியிடம் மேலும் அதிக பணத்தை வரதட்சணையாக வாங்கி வருமாறு அடித்து உதைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றும் (ஜூன் 9) வரதட்சணை தொடர்பாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. மூர்த்தி வேலைக்குச் சென்ற பின்னர், வித்யாகுமாரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் வித்யாகுமாரி.
தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் வித்யாகுமாரி

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வித்யாகுமாரியின் தாய் மீனாட்சி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதில், ”எனது மகள் வித்யாகுமாரியிடம் கணவர் மூர்த்தி பணம் கேட்டு அடித்து உதைத்துள்ளார். இதன் காரணமாகவே எனது மகள் தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்புக்குக் காரணமான கணவர் மூர்த்தி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். வித்யாகுமாரிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆனதால், அம்பத்தூர் ஆர்டிஓவும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து: கணவன்-மனைவி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.