சென்னை ராயப்பேட்டையில் உள்ள ’எக்ஸ்பிரஸ் அவென்யூ’ வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
அவர் அருண் குமார்,ரஞ்சித் குமார்,யுவராஜ்,அஜித் குமார்,ஸ்ரீநாத் ஆகிய ஐந்து பேரை அந்த பணிக்கு நியமித்து அனுப்பியுள்ளார். ரஞ்சித் குமார் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தார்.
உடனடியாக அவருடய அண்ணன் அருண் குமார் கழிவு நீர் தொட்டியின் கீழே இறங்கி மயக்கமடைந்த தம்பியை மீட்டார். ஆனால் ரஞ்சித்தை காப்பாற்றச் சென்ற அருண்குமாரையும் விஷவாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்த பணியில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரர் தண்டபாணி, எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக நிர்வாகம் ஆகியோர் மீது மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் முதல்முறையாக, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதனுடைய கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு குறிப்பிட்ட சமூகத்தை பயன்படுத்தியது மற்றும் 304 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க :கழிவு நீரை சுத்தம் செய்த இளைஞர் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு!