ETV Bharat / state

காதலியை கத்தியால் குத்திய காதலன் தற்கொலை!

சென்னை: புழல் அருகே காதலியை கத்தியால் குத்திய காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

காதலியை கத்தியால் குத்திய காதலன் தற்கொலை

author img

By

Published : Jan 29, 2021, 7:57 PM IST

சென்னை புழல் புத்தகரம் ராமலிங்கா நகரைச் சேர்ந்தவர் பிரேமலதா (25). இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். பிரேமலதாவும் புழல் புத்தகரம் புருஷோத்தமன் நகரில் செல்போன் கடை நடத்திவரும் சுதாகரன் என்பவரும் பள்ளியில் இருந்தே காதலித்துவந்துள்ளனர்.

சுதாகரன் செல்போன் கடை நடத்திவருவது பிரேமலதாவிற்குப் பிடிக்காமல் இருந்துவந்துள்ளது. இதனால், கடந்த சில நாள்களாக பிரேமலதா சுதாகரனிடம் பேசாமல் இருந்ததுடன் அவரது காதலையும் முடித்துக் கொண்டார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (ஜன. 28) அதிகாலை பிரேமலதா வீட்டிற்குச் சென்ற சுதாகர் அவர் வெளியே வரும்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

பின்னர், பிரேமலதா அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவர் நலமாக உள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய சுதாகரனைத் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று (ஜன. 29) அதிகாலை மாதவரம் வி.எஸ். நகரிலுள்ள செல்போன் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதன், அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கு இறந்து கிடந்தவர் பிரேமலதாவை கத்தியால் குத்திய சுதாகர் என்பதை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சரை அரிவாளுடன் விரட்டியவர் படுகொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.