சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் தேவநேசன் நகரைச் சேர்ந்த சங்கர் (28) என்பவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு, அவரது பள்ளிகால நண்பர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நண்பரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக திருச்சி சென்ற சங்கர், நேற்று (டிச. 17) வீடு திரும்பினார்.
இந்நிலையில், நண்பன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் சங்கர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று இரவு வீட்டில் தனி அறையில் இருந்த சங்கர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, தவலறிந்து சம்பவ இடம் விரைந்த பீர்க்கன்காரணை காவல் துறையினர், சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி வெளியீடு: பாட்டி பேரனை லாவகமாக காப்பாற்றிய காவலர்!