சென்னை அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (24). இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலைபட்சமாக நாகராஜ் காதலித்து வந்தார்.
இந்நிலையில் தன்னை காதலிக்க வேண்டும் என அடிக்கடி பள்ளி மாணவிக்கு அவர் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு மாணவி சம்மதிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசுவேன் எனவும் நாகராஜ் மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் மாணவியின் பெற்றோர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து மாணவியின் பள்ளி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் இளைஞரை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு - போக்சோவில் இளைஞர் கைது