சென்னை- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, தடுப்பை மீறி சென்ற வாகனத்தை காவல் துறையினர் விரட்டிப் பிடித்தனர்.
இதையடுத்து, வாகனத்தை தீவர சோதனையிட்டதில் வாகனத்தில் 2கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதனை கடத்தி வந்த லோகேஷ் (25) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர், தப்பியோடி, தலைமறைவான சென்னை செங்குன்றத்தைச் சார்ந்த ஷகில் (26) என்பவரையும் துரத்திப் பிடித்த காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.