சென்னை அடுத்த டிபி சத்திரம் 14ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா (23). பட்டதாரியான இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்துவந்துள்ளார். இவரும் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐசக் மனோஜ் குமார் என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக சரண்யாவுக்கும், அவரது காதலனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த சரண்யா, நேற்று (பிப். 22) காலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் தந்தை சங்கர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சரண்யா தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து டிபி சத்திரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் சரண்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமான காதல் இணையர் காவல் நிலையத்தில் தஞ்சம்!