ETV Bharat / state

முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் - சென்னை மாநகராட்சி - chennai vaccine

சென்னையில் தடுப்பூசி கையிருப்பு இருப்பதையொட்டி, மாநகராட்சி இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சி
மாநகராட்சி
author img

By

Published : Jul 11, 2021, 8:50 PM IST

சென்னை: கரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் சென்னையில் உள்ள சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படாது என மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தட்டுப்பாடு காரணமாக இணையதளம் மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்துகொள்ள முடியாத நிலை கடந்த ஒரு வாரமாக இருந்தது.

வந்தடைந்த தடுப்பூசி

இந்நிலையில், நேற்று (ஜூலை 10) சென்னைக்கு தடுப்பூசி வந்தடைந்தது. பின்னர், நேரில் வருபவர்களுக்கு மட்டுமே பதிவு செய்து தடுப்பூசி இன்று(ஜூலை 11) செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் இணைய தள பக்கத்தில் (http://gccvaccine.in) முன்பதிவு செய்து கொள்ளலாம்‌ என மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதிய மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை: ஒன்றிய அரசுக்கு கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.