ETV Bharat / state

எல்லோ கிரேஸி எறும்பு கடித்தவுடன் தோல் வியாதி ஏற்படும்.. வனவிலங்கு ஆராய்ச்சியாளர் - வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அசோக சக்கரவர்த்தி

திண்டுக்கல் அருகே வனவிலங்குகளைக் கொல்லும் விநோத எறும்புகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கொ.அசோக சக்கரவர்த்தி தகவல் அளித்துள்ளார்.

எல்லோ கிரேஸி ஆண்ட் கடித்தவுடன் தோல் வியாதிகள் ஏற்படும்

author img

By

Published : Aug 17, 2022, 7:06 PM IST

Updated : Aug 17, 2022, 8:55 PM IST

சென்னை: திண்டுக்கல் அருகே மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஒரு சிறு உயிரினத்தைப் பார்த்து அச்சப்படத் தொடங்கியுள்ளனர். எறும்பைப் போல நசுக்கி விடுவேன் என கிண்டலுக்கு சொல்லுவார்கள். ஆனால் எறும்பு ஒரு வட்டாரத்தையே அச்சுறுத்தும் கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா.

நத்தம் அருகே உள்ள கரந்தமலையை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் கடந்த சிலநாட்களாக விநோதமான பிரச்சனையை எதிர்கொண்டனர். விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் பார்வை திடீரென பறிபோனது. கோழிகள் செத்து விழுந்தன. இவ்வளவு ஏன் சுற்றுவட்டாரங்களில் பாம்புகள் கூட இறந்து கிடப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இவை அத்தனைக்கும் காரணம் படையெடுத்து வரும் எறும்புக் கூட்டம் தான்.

எறும்பு ஒரு வட்டாரத்தையே அச்சுறுத்தும் கதை

கரந்தமலையைச் சுற்றி சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் தனது எல்லையை விரிவு செய்துள்ளன இந்த கொடூர எறும்புகள். இந்த எறும்புகள் மனிதர்களில் உயிராபத்தை ஏற்படுத்தாது என்றாலும் வாழ்வாதாரமான கால்நடைகளை சிதைத்து விடும்.

இது தொடர்பாக கிராம மக்களை ஈடிவி பாரத் தொடர்பு கொண்டது. மலைகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் சிங்காரத்திடம் பேசிய போது, எறும்புகளின் கண்ணில் படும் சிறு உயிரிகள் அனைத்தும் உயிரிழந்து விடுகின்றன என்று அதிர வைத்தார். பாம்புகள், முயல்கள் போன்றவை மட்டுமின்றி காட்டுமாடு போன்ற பெரிய விலங்குகளின் கண்களையும் எறும்புகள் உண்டு விடுவதாக அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார்.

கரந்தமலையோரம் வசிப்பவரான ராசு, ஆட்டுகுட்டிகளின் கால்குளம்புகளை எறும்புகள் கடித்து தின்றுவிடுகின்றன என கவலை தெரிவித்தார். காட்டு பகுதிகளில் ஆடு குட்டி போட்டால் எறும்புகள் உடனே தின்று தீர்த்துவிடும் என்கிறார். இது பற்றி வனத்துறையிடம் புகார் அளித்த போது நடவடிக்கை இல்லை என கூறும் ராசு, கால்நடை மேய்ப்பவர்கள் கிராமங்களை காலி செய்து வெளியேறுகின்றனர் என கூறினார்.

அதிர்ச்சி அளிக்கும் இந்த எறும்புகள் தொடர்பாக சூழலியாளர் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர், உதவி பேராசிரியர் கொ. அசோக சக்கரவர்த்தி கூறுகையில், இந்த எறும்பின் பெயர் 'எல்லோ கிரேஸி ஆண்ட்' (yellow crazy ant). இந்த எறும்பு வகையானது எதற்கும் பயப்படாது. மேலும், பெரும்பாலும் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதிகமாக காணப்படும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில் இந்த வகை எறும்பு காணப்படும். எல்லோ கிரேஸி ஆண்ட் கடித்தவுடன் தோல் வியாதிகள் ஏற்படும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு (IUCN) இந்த எறும்பை உலகின் முதல் நூறு ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலில் வைத்துள்ளது. அனைத்து வகையான உயினங்களையும் இது உணவாக எடுத்து கொள்ளும். குறிப்பாக இறந்து போன உயிரினங்களை விரும்பி உட்கொள்ளும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த எறும்பானது பார்மிக் என்ற அமிலத்தை சுரக்கும். மேலும் இது இரவு மற்றும் பகல் என இரண்டு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கும். இது மிகப்பெரிய எறும்பு வகையாகும். இதனுடைய நீளம் சுமார் 7 மிமீ ஆக இருக்கும் என்றார். திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் அதிகமாக இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பூச்சிக்கொல்லி மூலம் இது கட்டுப்படுத்தப்பட முடியும். இதன் மூலம் கரந்தமலை பகுதியில் வாழும் வன உயிரினங்கள் ஆபத்தை சந்திக்க வாய்ப்புகள் அதிகம். இது கடித்தவுடன் தோல் வியாதிகள் ஏற்படும் என்றார்.

மக்களுக்கு பொருளாதார பாதிப்பு மட்டுமின்றி, காடுகளின் இயற்கைச் சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் இந்த எறும்புகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர். மாவட்ட வன அலுவலர் பிரபு கூறுகையில், இந்த செய்தி வந்தவுடன் இது எந்த வகை எறும்பு என அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முடிந்தவுடன் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விலங்குகளின் கண்களைக்குறிவைத்து தாக்கும் விநோத எறும்புகள்

Last Updated : Aug 17, 2022, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.