சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடம் புதிதாகப் பணியில் சேர்வோருக்கு மிகவும் கவுரவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தால் கிட்டத்தட்ட பதவிக்காலத்தின் இறுதியில் தான் உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு சீரான பணி உயர்வின் மூலம் வந்தடைய முடியும்.
ஆனால், உதவி ஆய்வாளராகப் பணியில் சேருபவர் கிட்டத்தட்ட ஐ.பி.எஸ். மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் குரூப் 1 அதிகாரிகளின் துவக்க நிலை பதவிகளை, பணிக்காலத்தின் இறுதியில் பெற முடியும். இதனால் எஸ்.ஐ. பணியிடம் குறித்த அறிவிப்பை இளைஞர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்பாணையை கடந்த சில நாட்களுக்கு முன்பு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (மார்ச்.8) தொடங்கியது.
இதனிடையே, தமிழ்நாட்டில் சார்பு உதவி ஆய்வாளர் பணியில் உள்ள 444 காலி இடங்களுக்கு நேரடிப்போட்டிக்கான எழுத்துத்தேர்வு வருகிற ஜூன் 25 அன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வு நேரம் காலை 10 மணிமுதல் 12.30 மணி வரை என வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றையதினம் தமிழ் தகுதி தேர்வு பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணிவரை, முதல் முறை தமிழ் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. காவல் துறையில் பணியாற்றுபவர்கள் சார்பு உதவி ஆய்வாளருக்கு போட்டியிடுவதற்கான துறைசார் எழுத்துத்தேர்வு வரும் ஜூன் 26 அன்று, காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறுகிறது.
இதனிடையே, இந்த தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. வருகிற 21-ம்தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அனைத்து காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், அனைத்து டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க: நான்கு வருட வேலை; ரூ.11 லட்சம் செட்டில்மென்ட் - ஆர்மியில் அசத்தலான பணிவாய்ப்பு!