ETV Bharat / state

அயலகத் தமிழர் தினம் 2024; 8 பிரிவுகளில் விருதுகள் வழங்க திட்டம்!

World Tamil Diaspora day 2024: தமிழ்நாடு அரசு சார்பில், மூன்றாம் ஆண்டாக "அயலகத் தமிழர் தினம்" ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில், சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

அயலகத் தமிழர் தினம் 2024
அயலகத் தமிழர் தினம் 2024
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 8:27 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கடந்த 2022 மற்றும் 2023இல் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக "அயலகத் தமிழர் தினம் 2024" ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தமிழ் வெல்லும்" என்ற கருப்பொருளில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அமர்வுகள், சிறப்பு கண்காட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர், வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு மற்றும் மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்களுக்கு "அயலகத் தமிழர் தினத்தில்" முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த எட்டு துறைகளில் தலை சிறந்து விளங்கும் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தின் https://nrtamils.tn.gov.in/en/ வாயிலாக விண்ணப்பங்களை அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அயலகத் தமிழர் தினத்தில் பங்கேற்பது, மற்றும் நிகழ்வுகள் தொடர்பான பிற விவரங்களுக்கு https://nrtamils.tn.gov.in/en/ என்ற வலைத்தளத்தின் வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - 4 பேரை காவலில் எடுத்து டெல்லி போலீஸ்! அடுத்த நகர்வு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.