ETV Bharat / state

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து ஆய்வுக்கூட்டம் - Ramachandran chaired the meeting with the officers

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து ஆய்வுக்கூட்டம்

author img

By

Published : Nov 8, 2022, 9:17 PM IST

சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நேற்றைய தினம்(நவ.7) தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் 4.18 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 21.34 மி.மீ. பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், நேற்று(நவ.7) திருவாரூர் மாவட்டத்தில் 1 மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 35 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளன. 77 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 72 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியதால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அக்.29 முதல் நவ.5 வரை மொத்தம் 2,83,961 உணவு பொட்டலங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 816 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 441 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது. அதில் 375 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 66 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 226 தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விபரம், இன்று காலை 8.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.43 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 33 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 680 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.66 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 84 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கோவை வெடிப்பு சம்பவம் - முக்கிய ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.