சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் 'மெக்கானிக்கல் சயின்ஸ் பிளாக்' கட்டடம் கட்டும் பணி கடந்த இரு மாதங்களாக, நடைபெற்றுவருகிறது. இந்த பணியினை குஜராத்தைச் சேர்ந்த, மோனார்க் பிரைவேட் லிமிடேட் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் செய்துவருகிறது.
இந்நிலையில், இங்கு மூன்றாவது மாடியில் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒடிசாவை சேர்ந்த பணியாளர் காணு பேஹ்ரா (24) கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
முதல்கட்டமாக, முறையான பாதுகாப்பு உபகரணங்களின்றி, காணு பேஹ்ராவை வேலையில் ஈடுபடுத்திய ஒப்பந்ததாரர்களான குஜராத்தைச் சேர்ந்த சஞ்சய் சுல்தார், கொளத்தூரைச் சேர்ந்த சத்யராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இருவரின் மீதும் 304(ஏ)- அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, விசாரணைக்கு பிறகு காவல் நிலைய பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:ரத்தத்தை குடிக்கும் தலைவர்கள்- உட்கட்சி பூசலில் கொந்தளித்த ஜோதிமணி