ETV Bharat / state

பிரபல நாட்டுப்புறப் பாடகரின் வீட்டில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

பிரபல நாட்டுப்புறப் பாடகரின் வீட்டில் கட்டடத் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
author img

By

Published : Nov 13, 2021, 5:26 PM IST

சென்னை: மேடவாக்கம் கூட்ரோடு ஐயப்பன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (30). ராஜா அண்ணாமலைபுரம் விசுவநாதன் சாலையில் உள்ள பிரபல நாட்டுப்புறப் பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் வீட்டில் கடந்த ஒரு வார காலமாக சரவணன் கட்டட வேலையில் ஈடுபட்டுவந்தார்.

நேற்று (நவ. 12) அவர் கலவை தூக்கும் இயந்திரத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் பணியை முடித்துவிட்டு சரவணன் கலவை தூக்கும் இயந்திரத்தின் சுவிட்சை மறந்து ஆப் செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சரவணன் இயந்திரத்தை நகர்த்திச் செல்லும்போது திடீரென மின்சாரம் தாக்கி விழுந்தார். இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த அவகாசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.