சென்னை: நொளம்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏ.ஆர்.மால், ஏஆர்டி நகைக்கடை போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனத்தில் வட்டியில்லா நகைக்கடன், முதலீட்டு தொகைக்கு அதிகவட்டி என பொதுமக்களிடம் ஆசை வார்த்தைக்கூறி மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டதாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் நொளம்பூர் போலீசார் உரிமையாளர்களான ஆல்வின், ஆரோன் மற்றும் ஊழியர்கள் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் பணி புரிந்து வந்த பிரியா என்ற பெண்ணை நொளம்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரியா 4 லட்ச ரூபாய் முதலீடு செய்ததாகவும், பின்பு தனது நண்பர்கள் மற்றும் உறவினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைச் சேர்த்து விட்டதாகவும், கடந்த ஆண்டு வியாசர்பாடியில் தனியாகக் கிளை நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இதுவரை 60 இலட்சம் வரை முதலீடு தொகை வசூல் செய்து கொடுத்துள்ளதும், அதற்காக மாதம் 4 லட்சம் வரை கமிஷன் தொகைப்பெற்று அந்த பணத்தின் மூலமாக முகப்பேர் பகுதியில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி வருவதும் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு பிரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயில் கிணற்றில் விழுந்து 35 பேர் பலி - ஸ்ரீராம நவமியில் அரங்கேறிய சோகம்!