சென்னை: சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாடத்தின் மேல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வெகு நேரமாக நின்று கொண்டு இருந்துள்ளார். திடீரென அந்த பெண் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது ஏறி நின்று கூவம் ஆற்றில் குதித்துள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் என்பவர் பெண் ஒருவர் ஆற்றில் குதித்ததை பார்த்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுனர் மகேஷ் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சாலையில் போக்குவரத்து பணியில் இருந்த காவலர் இடமும் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆற்றில் குதித்த அந்த பெண் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ் ஆற்றில் குதித்து பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கயிற்றை ஆற்றில் வீசி அந்த பெண்ணை காப்பாற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். இச்சம்பவத்தில் தன் உயிரை பொருட்படுத்தாமல் கூவத்தில் குதித்த இளம் பெண்ணை காப்பாற்றிய ராயப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகேஷை காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் பாராட்டினர்.
பின்னர் இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் ஆற்றில் குதித்த பெண் யார் எனவும், எதற்காக பாலத்தில் இருந்து குதித்தார் என விசாரணை மேற்கொண்ட போது,
பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும், நேற்று தனது பெற்றோருடன் விநாயகர் சிலையை கரைப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்தபோது அந்த பெண் திடீரென நேப்பியர் பாலத்தில் இருந்து கூவத்தில் குதிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: காதல் மனைவி கழுத்தறுத்து கொலை.. 2 நாட்களாக சடலத்துடன் இருந்த கணவர்! - நடந்தது என்ன?