சென்னை: இதுதொடர்பாக அவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , " அண்ணா நகரில் வசிக்கும் மரியசெல்வம் பல திருச்சபைகளுக்கு சென்று தான் ஒரு கிறிஸ்துவ ஊழியக்காரி என்று பேசி பல்வேறு இடங்களில் போதனை செய்துள்ளார்.
அப்பொழுது அந்த திருச்சபைகளில் இருக்கும் பாதிரியார்களிடம் இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு நான் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். கிட்டத்தட்ட இதுவரை இந்தப் பெண்ணால் பல்வேறு இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்குத் தெரிந்த வரை ரூ.75 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். ஆனால் பல கோடி ரூபாய் வரை இந்தப்பெண் மோசடி செய்து இருப்பார்.
இது தெரிந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பொழுது காவல்துறையினர் அந்தப் பெண்ணுக்கு சாதகமாக பேசினர். இதனால் நாங்கள் டிஜிபி அலுவலகத்தில் சென்று புகார் அளித்தோம். அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டு அந்த பெண் மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டது. இருந்தும், காவல்துறை இதுவரை அந்தப் பெண்ணைக் கைது செய்யாமல் இருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் இனிமேல் இவரால் யாரும் பாதிக்கப்படக்கூடாது அதற்காகத்தான் நாங்கள் இவ்வளவு போராடிக் கொண்டிருக்கிறோம். காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வள்ளுவர் கோட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து திருச்சபைகள் ஊழியர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரும்புக்கை மாயாவியாக மாறிய பூசாரி.. புலிகளின் காட்டுக்குள் பாரம்பரிய விழா..