ETV Bharat / state

காதலனின் பிறந்தநாளில் தற்கொலை செய்துகொண்ட பெண் காவலர் - Woman railway inspector commit suicide at Chennai

சென்னை: காதலனுக்கு பிறந்தநாள் கொண்டாட விரும்பி, கேக் வெட்ட அழைத்தபோது அவர் வராததால், ரயில்வே பெண் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்கொலை
தற்கொலை
author img

By

Published : May 1, 2020, 2:08 PM IST

சென்னை அயனாவரம், பனந்தோப்புக் காலனி குடியிருப்பில் வசித்துவந்தவர் சரண்யா (21). இவர் 2017ஆம் ஆண்டு காவல் பணிக்குத் தேர்வாகி, தென்னக ரயில்வேயில் பெண் காவலராகப் பணிபுரிந்துவந்துள்ளார்.

சரண்யா காவலர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏழுமலை என்பவருடன் காதல் மலர்ந்ததைத் தொடர்ந்து, சில ஆண்டுகளாக இருவரும் காதலித்துவந்துள்ளனர்.

ஆனால், கடந்த சில நாள்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகளும் சண்டை, சச்சரவுகளும் ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கரோனா பணியை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய சரண்யா, தனது காதலன் ஏழுமலைக்குப் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டுவதற்காகத் தனது வீட்டிற்கு அவரை அழைத்துள்ளார்.

ஆனால் வீட்டிற்கு வர முடியாது என ஏழுமலை கூறியதை அடுத்து மனமுடைந்த சரண்யா, தனது அறையில் துப்பாட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து அருகிலிருந்த நபர்கள் கொடுத்த தகவலின்பேரில், ஓட்டேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சரண்யாவின் உடலைக் கைப்பற்றி கே.எம்.சி. மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்தத் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஏழுமலையிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: குளிக்கச் சென்றவர் இடிதாக்கி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.