ETV Bharat / state

பெண் தீக்குளிப்பு- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை! - காவதுறையினரின் நடவடிக்கையால் உயிரிழந்த பெண்

சென்னை: காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளரின் நடவடிக்கையால் மனமுடைந்து தீக்குளித்த பெண்ணின் கணவனுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்
author img

By

Published : Apr 27, 2021, 11:21 PM IST

சென்னையை அடுத்த திருவேற்காடு செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் என்பவருக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான அமிர்தவள்ளிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. கஜேந்திரன் வீட்டில் கட்டிய கழிப்பறையால் பிரச்சினை ஏற்படுவதாக, திருவேற்காடு காவல் நிலையத்தில் அமிர்தவள்ளி புகார் அளித்தார்.

இருதரப்பும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜரான கஜேந்திரன் மனைவி ரேணுகாவைப் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஆய்வாளர் அலெக்ஸாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மனமுடைந்த ரேணுகா, அவமானத்தில் பெட்ரோலை வாங்கி தன்மேல் ஊற்றிக்கொண்டு காவல் நிலையத்தின் முன்பே தீக்குளித்தார். பின் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேணுகா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ரேணுகா சிகிச்சையில் இருக்கும் நேரத்தில் அவரது கணவர் கஜேந்திரன் அளித்த தகவலில், ஆய்வாளர், உதவி ஆய்வாளர் செயல்பாடு குறித்து கூறியதாகச் செய்தி வெளியானது. கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த இச்சம்பவம் தொடர்பான செய்தியை, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்கை விசாரித்தார்.

அப்போது காவல்துறை தரப்பில், குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டு தொடர்பான ஆவண ஆதாரங்களை ஆராய்ந்த ஆணைய உறுப்பினர், காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்தார்.

அதன்படி ஆய்வாளர் அலெக்ஸாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த ரேணுகாவின் கணவர் கஜேந்திரனுக்கு ரூ.3 லட்ச இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசிற்குப் பரிந்துரைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.