சென்னை புளியந்தோப்பு பெரியார் நகர் பகுதியில் வசித்துவருபவர் அலிமா (35). இவர் அங்குள்ள வீடுகளில் வேலை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (செப்.14) காலை அலிமா புளியந்தோப்பு நாராயண சுவாமி தெருவில் சாகிதா பேகம் என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் அலிமா ஓரமாக நடந்து சென்றபோது, எதிர்பாரதவிதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் அப்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிசிடிவி காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:மண பந்தத்தை தாண்டிய உறவுக்கு இடையூறு: குழந்தை கொலை... இருவர் கைது!