ETV Bharat / state

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு!

சென்னை: இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மண்ணடி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் செரினா பானு என்ற பெண் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

woman-killed-as-roof-collapses-in-chennai
author img

By

Published : Sep 19, 2019, 1:14 PM IST

சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் செரினா பானு(42). இவரது கணவர் நவாஸ்கான். அவர் சாலை விபத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். செரினா பானு தன்னுடைய மகள் நஸ்ரின் பாத்திமா மற்றும் மகன் லெனினுடன் மண்ணடி பகுதியில் வசித்து வந்தார். செரினா பானு கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வேலை முடித்து வீட்டிற்கு வந்த செரினா பானு குழந்தைகளுடன் உறங்கச் சென்றார். நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வந்ததையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் பலத்த இடி தாக்கி உள்ளது.

woman-killed-as-roof-collapses-in-chennai
விபத்து நேர்ந்த இடம்

அப்போது உறங்கிக் கொண்டிருந்த நஸ்ரின் பாத்திமா, லெனின் மீது ஓடுகள் உடைந்து விழுந்துள்ளன. அதனையடுத்து இருவரும் வெளியே ஓடிவந்துள்ளனர். அடபபோது வீட்டில் தரையில் உறங்கிக் கொண்டிருந்த செரினா பானு மீது மேற்கூரை ஓடுகள் முழுவதும் மளமளவென சரிந்து விழுந்ததில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தாய் மீது ஓடுகள் விழுந்து அவர் சிக்கிக்கொண்டதை கண்டு குழந்தைகள் கதறி அழுதனர்.

உயிரிழந்த செரினா பானு
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த செரினா பானுவின் உடலை மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணடி போலீசார் செரினா பானுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடி தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க...

கனமழை காரணமாக 20- கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவதி!!

Intro:Body:சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஜெரினா பானு என்ற பெண் உயிரிழப்பு.

சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில் வசிக்கும் செரினா பானு (42). இவரது கணவர் பெயர் நவாஸ்கான். அவர் சாலை விபத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். செரினா பானு தன்னுடைய மகள் நஸ்ரின் பாத்திமா மற்றும் மகன் லெனினுடன் மண்ணடி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். செரினா பானு கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று வேலை முடித்து குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது கொண்டு இருந்ததால் அதிகாலை 4 மணிக்கு பலத்த இடி தாக்கி உள்ளது. அப்போது
வீட்டு கட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்த நஸ்ரின் பாத்திமா, லெனின் மீது ஓடுகள் விழுந்து உள்ளன. சத்தம் கேட்டு இருவரும் அங்கு தப்பி வெளியே வந்துள்ளனர்.

வீட்டில் தரையில் உறங்கிக் கொண்டிருந்த
செரினா பானு மீது ஓடுகள் முழுவதும் விழுந்ததில் அவர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செரினா பானுவை மீட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மண்ணடி போலீசார் செரினா பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னையில் இடி தாக்கி பெண் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.