ETV Bharat / state

சென்னையில் இளம்பெண் தற்கொலை - காரணம் என்ன? - Pammel V U C Nagar

பல்லாவரம் அருகே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 3, 2023, 6:50 AM IST

Updated : Jun 3, 2023, 12:13 PM IST

சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ பட்டதாரியான பசிலத்காத்தூன் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜமீல் அகமது (36) என்பவரை கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 1) இரவு பசிலத்காத்தூனின் சகோதரர் முகமது கான் செல்போனில் தொடர்பு கொண்டபோது, பசிலத்காத்தூன் கதறி அழுதியபடி பேசி உள்ளார். இதனால் அவரை சகோதரர் சமாதானம் செய்து போனை வைத்துள்ளார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் பசிலத்காத்தூனின் மாமியர் ஷகிலா ‘உங்களின் மகள் தற்கொலை செய்து கொண்டார். வந்து பிணத்தை எடுத்துச் செல்லுங்கள்’ என பசிலத்காத்தூனின் தாயார் ஹசினாவிடம் தொலைபேசியில் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: விமான நிலைய கழிவறையில் 16 கிலோ தங்கம்.. வாரணாசியில் நடந்தது என்ன?

இதனால் அதிர்ச்சி அடைந்த பசிலத்காத்தூனின் தாயார் ஹசினா தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "பசிலத்காத்தூனிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் கணவர் ஜமீல் அகமதும் மற்றும் அவரது மாமியார் ஷகிலாவும் தினமும் அடித்து சித்திரவதை செய்து வந்தனர்.

தற்கொலை தவிர்
தற்கொலை தவிர்

மேலும் ஜமீல் அகமது சுமார் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதனை அடைப்பதற்காக பசிலத்காத்தூனிடம் அவரது தாயார் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு சித்ரவதைபடுத்தினர். எனவே, இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிலத்காத்தூனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், பசிலத்காத்தூனின் கணவர் ஜமீல் அகமது மற்றும் மாமியார் ஷகிலா ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரனை செய்து வருகின்றனர். மேலும் திருமணமான ஆறு வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரனைக்கு உட்படுத்தபட்டுள்ளது.

மேலும், திருமணமான ஆறு வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திருமணம் ஆன ஒரே மாதத்தில் காதல் மனைவியை கொலை.. பலே நாடகம் அரங்கேற்றிய கோவை இளைஞர் சிக்கியது எப்படி?

Last Updated : Jun 3, 2023, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.