ETV Bharat / state

காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸில் யாரும் அரசியல் செய்ய முடியாது - மல்லிகார்ஜூன கார்கே - காங்கிரஸ்

சசி தரூருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நான் கூறியதில்லை என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸில் யாரும் அரசியல் செய்ய முடியாது - மல்லிகர்ஜூன கார்கே

author img

By

Published : Oct 15, 2022, 2:33 PM IST

சென்னை: சத்தியமூர்த்தி பவனில் அகிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தனக்கான ஆதரவை திரட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லையென்றாலும், நலன் விரும்பிகளின் அழுத்தத்திற்குப் பிறகு ஒப்புக்கொண்டேன். எவ்வாறாயினும், நான் ஒருபோதும் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக இருக்க மாட்டேன்.

நிச்சயமாக வெற்றி பெறுவேன் என நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கட்சிக்காக எந்த முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன்பு காந்தி குடும்பத்துடன் கலந்தாலோசிப்பேன். காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸில் யாரும் அரசியல் செய்ய முடியாது.

எங்கள் கட்சி ஜனநாயகக் கொள்கையில் இயங்குகிறது. நான் கூட்டுத் தலைமையை நம்புகிறேன். அனைவரிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெறுவேன். ஒருவரால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. வெற்றிக்குப் பிறகு, கட்சியின் உதய்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதே எனது முதல் கடமை.

காந்தி குடும்பத்தில் இருந்து தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டோம் என ராகுல் காந்தி தெளிவாக கூறி இருக்கிறார். நான் வெற்றியடைவேன் என முழு நம்பிக்கையோடு இருக்கிறேன். அதற்கு சோனியா காந்தி உறுதுணையாக இருப்பார்.

காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸில் யாரும் அரசியல் செய்ய முடியாது

பல கட்சி தலைவர்கள் என்னை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், எனது போட்டி வேட்பாளர் சசி தரூருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் ஒருபோதும் கூறவில்லை" எனக் கூறினார். இந்த நிகழ்வில் திருநாவுக்கரசர் எம்.பி., மூத்த தலைவர் தங்கபாலு, செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அடுத்த 2 மாதங்களில் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் கிடைக்கும் - ஹர்தீப் சிங் பூரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.