ETV Bharat / state

தோழர்களுக்கு இதயத்தில் இடம்: சமரசம் செய்யும் திமுக! - நாளை இந்திய கம்யூனிஸ்ட் அவசர செயற்குழு

சென்னை: இரட்டை இலக்கத்திற்கு தோழர்கள் உரிமைச் சண்டையிட்டு வரும்நிலையில், இதயத்தில் இடமளித்து ஒற்றை இலக்கத்தில் சீட்டுகளைத் தர திமுக தீவிர சமரசத்தில் ஈடுபட்டுவருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

author img

By

Published : Mar 3, 2021, 6:27 PM IST

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் நாளை (மார்ச் 4) கூடுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முத்தரசன், வழக்கமாக நடக்கும் மாநிலக் குழுக் கூட்டம் நாளை கூடுவதாகவும், அதில் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒரே கட்டத்தில் எதுவும் சுலபமாக முடிந்து விடாது என்றார். தொடர்ந்து பலமுறை பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாத பேரவை 2016இல் நடந்தேறியது துரதிருஷ்டவசமானது என அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். இதற்காக முதன்முதலில் தனது வருத்தத்தைப் பதிவுசெய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பது கவனிக்கத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.