கடந்த 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் குஷ்பூ இணைந்தார். ஆனால் தற்போது வரை அவருக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில் அவர் பாஜகவில் சேரப் போகிறார் என்ற தகவல்கள் பரப்பப்பட்டன.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ நாளை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டார்.
பாஜகவில் இணைகிறீர்களா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார். தொடர்ந்து, காங்கிரசில் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
இதையும் படிங்க:வதந்திகள் எனக்குப் பழகிவிட்டன - குஷ்பூ