ETV Bharat / state

'ஏன் தேர்வான காவலர்களை நியமிக்க அரசு தயங்குகிறது?' - கமல்ஹாசன்

சென்னை: கரோனா காலத்தில் காவலர்களின் பணிச்சுமை அதிகரிக்கும் சூழலில் தேர்வான காவலர்களை நியமிப்பதில் ஏன் தாமதமாகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Why the state delaying appointing  selected policemens Kamal Haasan question to state

author img

By

Published : Jul 25, 2020, 6:50 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணி நியமனத்துக்கான தேர்வில் 21 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களில், எட்டாயிரத்து 500 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டது. இதில் உடல் தகுதி மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற 11 ஆயிரம் பேருக்கு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், நடப்பு ஆண்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மேலும் 10 ஆயிரம் பேரை நியமனம் செய்யவுள்ளதாக அரசு அறிவித்தது.

தற்போதுள்ள கரோனா பேரிடர் சூழலில் நேர்முக தேர்வு நடத்துவது இயலாத சூழல். மேலும் இது அரசுக்கு நிதிச்சுமையைக் கூடுதலாக்கும். எனவே, முன்னதாக தேர்ச்சிபெற்ற தகுதியுள்ள நபர்களைப் பணியமர்த்துவதை அரசு கருத்தில் கொள்ளலாம். காவலர்களின் பணிச் சுமை அதிகரித்துள்ள சூழலிலும் காவலர்களை நியமிக்க அரசு தயங்குவது ஏன்?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.