ETV Bharat / state

இலாகா இல்லாத அமைச்சருக்கு ஏன் மக்கள் வரி பணத்தை செலவு செய்ய வேண்டும்? - ஜெயக்குமார் - மாமன்னன்

இலாகாவே இல்லாத அமைச்சருக்கு, ஏன் மக்கள் வரி பணத்தை செலவு செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 30, 2023, 2:16 PM IST

சென்னை: சூப்பர் ஸ்டைக்கர்ஸ் என்ற கால்பந்து கிளப்பின் லோகோ வெளியீட்டு விழாவில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஜெயக்குமார், “தமிழ்நாட்டின் விளையாட்டு தலைநகரமாக சென்னை இருக்க வேண்டும் என ஆசிய விளையாட்டு போட்டிகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னையில் நடத்தினார்கள்.

அப்போது பல விளையாட்டு மைதானங்களை உருவாக்கி, அதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டில் முதன்மையான மாநிலம் என ஜெயலலிதா உருவாக்கினார். தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரின் செயல்பாடு கேவலமாக உள்ளது” என கூறினார்.

செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து பேசிய ஜெயக்குமார், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. செந்தில் பாலாஜி மிகப்பெரிய ஊழல்வாதி, நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று ஸ்டாலின் கூறினார்.

அமலாக்கத்துறை கைது செய்து கைதி எண் கொடுக்கப்பட்ட நபர் எவ்வாறு அமைச்சராக தொடர முடியும்? அதுதான் எங்கள் கேள்வி. அதனால்தான் நாங்கள் ஆளுநரிடம் மனு அளித்தோம். எங்கள் ஆட்சி காலத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இது போன்று நீக்குங்கள் என ஆளுநரிடம் உதாரணங்களை நாங்கள் கூறினோம்.

இலாகா கவனிக்கத்தான் ஒரு அமைச்சர். இலாகா இல்லாத அமைச்சருக்கு எதற்கு மக்களின் வரிப் பணத்தை செலவு செய்ய வேண்டும்? மாநிலத்தின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் அமைச்சராக இருக்கும் நிலையில் விசாரணைக்கு எவ்வாறு ஒத்துழைப்பார்? ஒத்துழைக்க மாட்டார்கள். அமைச்சராக இருந்தால் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் பல உண்மைகள் வெளி வராமல் சென்று விடும்.

சமயோகித புத்தியில் ஆளுநர் செந்தில் பாஜியை நீக்கி உள்ளார். அதன் பின் அட்டர்னி ஜெனரலிடம் கலந்து ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்வியை ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும். அமைச்சர் என்பது ஒரு கேடயம். அது செந்தில் பாலாஜியைச் சுற்றி இருந்தால் அமலாக்கத்துறை செலுத்தும் வாளை அந்த கேடயம் தடுக்கும்.

அமைச்சராக நீடிப்பதற்கு செந்தில் பாலாஜிக்கு எந்த வித தகுதியும் இல்லை. அமைச்சர் என்கிற கேடயத்தின் மூலம் அமலாக்கத் துறையின் வாளை தடுப்பது‌தான் மாநில அரசின் உச்சபட்ச எண்ணமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது” என கூறினார்.

மாமன்னன் திரைப்படம் குறித்து பேசிய ஜெயக்குமார், “படமெல்லாம் நான் பார்ப்பது கிடையாது. மாமன்னன் சுத்த பிளாப் படம்தான். திமுகவினர்தான் அந்த படத்தைச் சென்று பார்க்கிறார்கள். சமூக நீதி பற்றி பேச திமுகவிற்கு தகுதி இருக்கிறதா? அதிமுகதான் தலித்துகளுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுத்த கட்சி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் சமூக நீதியை நிலை நாட்டியவர். தனபால் சபாநாயகராக இருக்கும்போது திமுகவினர் அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி சமூக நீதியை குழி தோண்டி புதைத்தனர். சமூக நீதிக்கும், திமுகவிற்கும் சம்பந்தம் கிடையாது. அருந்ததிய சமூதாயத்தினரை திமுகவினர் தற்போது சபாநாயகராக அமர வைப்பார்களா?” என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: கிண்டிக்கு ஒரு கேள்வி? - சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.