ETV Bharat / state

குழந்தைகள் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது - உயர் நீதிமன்றம் வேதனை - சமூக நலத்துறை முதன்மை செயலாளர்

சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து உள் துறை, சமூகநலத் துறை முதன்மைச் செயலர்கள்  நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai highcourt
chennai highcourt
author img

By

Published : Nov 19, 2020, 6:52 PM IST

சென்னை பாரிமுனை பகுதியில் தெருவோரம் தூங்கிய 8 மாத குழந்தை ராகேஷ், வால்டாக்ஸ் சாலையோரம் தூங்கிய சரண்யா ஆகியோர் 2016ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கக்கோரி எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல் ஆள்கொணர்வு மனு தாக்கல்செய்தார். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குழந்தைகள் கடத்தலைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குழந்தைகள் கடத்தல் குறித்த அறிக்கை தாக்கல்செய்ய அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், குழந்தைகள் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் சிறார் நீதி சட்ட விதிகளைப் பின்பற்றாமல் செயல்படும் சிறார் காப்பகங்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், லாப நோக்கில் செயல்படும் இதுபோன்ற காப்பகங்களால்தான் ஆதரவற்ற குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

கரோனா பேரிடர் காலத்தில் இதுபோன்ற காப்பகங்களில் தங்கியிருந்த ஆதவற்ற குழந்தைகள், சிறார்களின் நலனுக்காக ஒரு பொதுநல வழக்குக்கூட தொடரப்படவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். தமிழ்நாடு அரசும் அவர்கள் குறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதால்தான் அவர்கள் மீது யாரும் அக்கறை கொள்ளவில்லையா? எனவும் கேள்வி எழுப்பினர்.

பல டிராபிக் சிக்னல்களில் ஏராளமான குழந்தைகளை வைத்து, வட மாநிலப் பெண்கள் பிச்சை எடுப்பது அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவர்கள் வைத்திருப்பது கடத்தப்பட்ட குழந்தைகளா? அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஏன் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வதில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

காலியாக உள்ள மாநில குழந்தைகள் நல ஆணைய பதவிகள் நிரப்பப்படாததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 2016ஆம் ஆண்டுமுதல் பல உத்தரவுகள் பிறப்பித்தும் குழந்தைகள் கடத்தல் வழக்குகளை காவல் துறையினர் முறையாக கையாளவில்லை எனவும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உள் துறை, சமூகநலத் துறை முதன்மைச் செயலர்கள், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.