ETV Bharat / state

அடிமை மனோபாவம் தமிழ்நாட்டில் இல்லை - வா. ரங்கநாதன்

சென்னை: நான் ஏன் கருவறைக்குள் நுழைய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் சொல்வதுபோல் பார்ப்பன அடிமை மனோபாவம் தமிழ்நாட்டில் இல்லை என அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் கூறியுள்ளார்.

ஃப
ஃப்ச்ட
author img

By

Published : Feb 1, 2021, 2:01 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “அர்ச்சகர் பயிற்சிபெற்ற பார்ப்பனரல்லாத 203 மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு கருவறை தீண்டாமை தமிழ்நாட்டில் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை! ஜனவரி 28, 29 அன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அர்ச்சகர் பயிற்சிபெற்ற பார்ப்பனரல்லாத 207 மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட பாரதிய ஜனதா கட்சி போராடுமா?

கந்த சஷ்டி கவசத்தினை கருறையில் பாட, தமிழ் வழிபாட்டிற்காகப் போராடுமா? என அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் முருகனிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முருகன், ”பேராசிரியர் வேலையை நீ செய்ய முடியுமா? நான் ஏன் கருவறைக்குள் போக வேண்டும்? கடவுள்களை ஆகம விதிகளின்படி வழிபட பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்கும். அனைத்து சாதி அர்ச்சகராகும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது எனக் சொல்லிவிட்டு மேலும் கேள்விகள் கேட்கவிடாமல் தனியாக விவாதத்திற்கு வாருங்கள்" எனச் செய்தியாளரின் வாயடைத்துள்ளார்.

2006Eம் ஆண்டு அன்றைய திமுக ஆட்சியின்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து கோயில்களில் அர்ச்சகராக்குவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டில் 6 சிறப்பு பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் பயிற்சி முடித்த மாணவர்கள் நாங்கள் அர்ச்சகராகும் தகுதி திறமையோடு இருக்கிறோம்.

2006ஆம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் இந்த அரசாணையை எதிர்த்து, மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்கள் கடவுளைத் தொட்டு பூஜை செய்தால் தீட்டாகிவிடும் எனப் பொதுமக்கள் சொல்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் நேரடியாகத் தொடர்ந்த வழக்கில் அரசாணைக்கு இடைக்காலத் தடையாணை பிறப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கில் எமது அர்ச்சகர் பயிற்சிபெற்ற மாணவர்கள் சங்கம் சார்பிலும் அரசாணையை ஆதரித்து வாதாடினோம். இதன் இறுதி தீர்ப்பு டிசம்பர் 16, 2015 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சிபெற்ற பார்ப்பனரல்லாத எங்களைப் போன்ற மாணவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படத் தடையில்லை; ஏனெனில் எந்தக் கோயில் ஆகமத்திலும் பார்ப்பன சாதியினர்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என இல்லை என்று சட்ட வல்லுநர்கள், தமிழ் ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.

"அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில் சாதி, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு அர்ச்சகர் நியமனத்தில் காட்டப்படுவதை ஏற்க இயலாது; குறிப்பிட்ட கோயில்களின் ஆகமங்களுக்கு ஏற்ப அர்ச்சகர் நியமிக்கப்படலாம்; அனைத்து கோயில்களின் அர்ச்சகர் நியமனங்களுக்கும் பொதுவான ஒர் அரசாணை என்பதுதான் ஏற்புடையதல்ல" இவையே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாரம் என்கிறார்கள்.

தீர்ப்பு கொடுத்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. தீர்ப்பிற்குப் பின் அத்திபூத்ததுபோல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் மாரிச்சாமி மட்டும் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயில் அர்ச்சகராக 2018ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார் எஸ். முருகன். அரசியலமைப்புச் சட்டம் நெறிமுறை, கருவறைத் தீண்டாமை ஒழிப்பு இவை ஏதும் எல். முருகன் உள்ளிட்ட பாஜக, சங்க பரிவாரங்களுக்கு அவசியமில்லை போலும். 'ஆகமம்' என்னும் பெயரில் சாதிய சனாதனத்தினை அடைகாக்கும் கூடுகளாக கருவறைகள் நீடிக்கவே இவர்கள் விரும்புகின்றனர்.

தாங்கள் எந்த 'இந்துக்களின்' நலனுக்காக உள்ளோம் என்பதினையும் இதன்மூலம் தெளிவுபடுத்திவிட்டனர். “நான் ஏன் கருவறைக்குள் நுழைய வேண்டும்“ என்பதில் நிலவும் பார்ப்பன அடிமை மனோபாவம் இன்றைய தமிழ்நாட்டின் பெருவாரியான ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களிடம் இல்லை.

அர்ச்சகர் பயிற்சிபெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு கருவறை தீண்டாமை தமிழ்நாட்டில் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என அதற்கான போராட்டத்தினை நம்பிக்கையுடன் தொடருவோம். அதற்குத் தடையாக வரும் எவற்றையும் கடந்திடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.