ETV Bharat / state

தேசிய கீதத்தை தாய் மொழியில் பாடக்கூடாதா -கே.பாலகிருஷ்ணன் கேள்வி - cbi secretary K Balakrishnan

சென்னை: தேசிய கீதத்தை ஏன் மற்ற நாடுகளைப் போல், தாய் மொழியில் பாடக்கூடாது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

Why Don't sing the national anthem in Mother tongue - K Balakrishnan
author img

By

Published : Nov 6, 2019, 9:46 AM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு” என்கிற தலைப்பில் தென் மாநிலங்களின் மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகித்த இந்த மாநாட்டில், கேரள மாநில இடது ஜனநாயக முன்னணிண்ணின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், சிபிஎம் தெலங்கானா மாநிலச் செயலாளர் வீரபத்தரம், கர்நாடக மாநிலச் செயலாளர் பசவராஜ், மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே. பாலகிருஷ்ணன், "மத்தியில் அமைந்திருக்கும் பாஜக ஆட்சி ஒரு பக்கம் பொருளாதாரத்தை நாசமாக்கி கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து இடதுசாரிகள் மார்க்சிஸ்ட் கட்சி தான் போராடுகிறது. பாஜக இந்தி திணிப்பு, சமஸ்கிருத மையம் அமைத்தலைக் கையிலெடுத்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாய் மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பதை கையிலெடுக்கிறது” என்றார்.

கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும் பேசிய அவர், இந்தி திணிப்பு என்பது வெறும் மொழி திணிப்பு அல்ல. மாநிலங்களை அழிக்கக்கூடிய போராட்டத்தினுடைய பகுதி அது. தாய் மொழி காப்பாற்றப்பட வேண்டிய அவசர காலகட்டத்தில் இருக்கிறோம். ஏன் மற்ற நாடுகளைப் போல், தேசிய கீதத்தை தாய்மொழியில் பாடக்கூடாது” என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க...15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் - ஓ. பன்னீர்செல்வம்

Intro:Body:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்கிற தலைப்பில் தென் மாநிலங்களின் மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்த இந்த மாநாட்டில் கேரள மாநில இடது ஜனநாயக முன்னணிண்ணின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், சிபிஎம் தெலங்கானா மாநிலச் செயலாளர் வீரபத்தரம், கர்நாடக மாநிலச் செயலாளர் பசவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தீர்மானங்களை முன்மொழிந்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த மாநாடு வெற்றி அடைய தி.மு.க தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், "எதற்காக இந்த மாநாடு என்பதை இங்கு பேசியுள்ள தலைவர்கள் விளக்கமாக கூறிற்றுள்ளனர். இன்றைக்கு மத்தியில் அமைந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சி ஒரு பக்கம் பொருளாதாரத்தை நாசமாக்கி கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து நெஞ்சுறுதியோடு இந்தியாவில் போராடுகிறது என்று சொன்னால் அது இடதுசாரிகள் மார்க்சிஸ்ட்டுகள் தான். ஏனென்றால் மற்றவர்களுக்கு எதிர்த்து போராடுகிற குரல் கொடுக்கிற நிலைமை என்பதில்லை.

அதேபோல் இன்றைக்கு அவர்கள் கலாச்சார தளத்தில் இந்தி திணிப்பு சமஸ்கிருத மையம் போன்ற ஆயுதத்தை கையிலெடுக்கின்ற போது எங்களுக்கு எங்கள் ஆசான்கள் நீ எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை உன்னுடைய எதிரிகள்தான் தீர்மானிக்கின்றனர் என்று போதித்துள்ளனர்.

அந்த வகையில் நீங்கள் இந்தி திணிப்பு சமஸ்கிருத மையம் என்று கையிலெடுத்தால் நாங்கள் தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற முழக்கத்தை இந்த மாநாட்டின் மூலம் முன்னேடுத்து செல்கிறோம்.

இந்தி திணிப்பு என்பது வெறும் மொழி திணிப்பு அல்ல. மாநிலங்களை அழிக்கக்கூடிய போராட்டத்தினுடைய பகுதி அது. ஒரு நாள் ராத்திரியில் அரை மணிநேர உத்தரவில் காஷ்மீரத்தை புரட்டி போட்டுவிட்டனர். அதேபோல் தமிழகத்தை இந்தியாவை புரட்டிடோடட எத்தனை ஆண்டுகாலம் தேவைப்படும்.

மரியாதைக்குரிய மா.ராஜேந்திரனிடம் பேசியபோது சொன்னார் ஆட்சி மொழி மட்டுமல்ல. பாடுகின்ற தேசிய கீதத்தைகூட தாய்மொழியில் பாடுகின்ற அளவுக்கு சில நாடுகளில் இருக்கிறது. நாமும் ஜன கன மனகதி என்று பாடிட்டே இருக்கிறோம். யாருக்காவது அதனுடைய அர்த்தம் என்ன என்று தெரியுமா. ஏன் இந்தியாவில் இருக்கின்ற தேசிய கீதத்தை அந்தந்த மொழியில் மாற்றி பாடக்கூடாதா. எனவே இப்படிப்பட்ட உலக அனுபவங்களை பலரும் சுட்டிக்காட்டி பேசுகின்ற போது இந்தியாவினுடைய ஆடௌசி மொழி இந்தி மட்டும்தான் என்ற சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் மொழிக்காக வெற்று கோஷங்கள் போடுவது மட்டுமல்ல தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்கள். தாய் மொழி காப்பாற்றப்பட வேண்டிய அவசர காலகட்டத்தில் இருக்கிறோம். இநேதி திணிப்பை இன்று தடுத்து நிறுத்துகிறோம். இதன்மூலம் மத்தியிலிருக்கின்ற பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் எடுக்கக்கூடிய அந்த பண்பாட்டு ரீதியான போராட்டத்தை களத்திலே சந்திப்பதற்கு உறுதியேற்கின்ற மாநாடாக இந்த மாநாடு நடந்திருக்கிறது" என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.