ETV Bharat / state

டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை ஏன் அமல்படுத்தக்கூடாது - நீதிமன்றம் கேள்வி - liquer bottle returns schemes all over state

நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் ஏன் அமல்படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் ஏன் அமல்படுத்த கூடாது

author img

By

Published : Jun 10, 2022, 9:20 PM IST

சென்னை: வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.

பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும்; தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 80ஆயிரம் பாட்டில்கள் திரும்பப் பெறுவதாகவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அப்படியானால் இந்த திட்டத்தை ஏன் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை முன் வைத்தனர். மாவட்ட ஆட்சியரும் டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனை மேற்கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவித்தனர். தற்போதுதான் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும், ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு: 2ஆவது அறிக்கையினை தாக்கல் செய்த சிறப்பு புலனாய்வுக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.