ETV Bharat / state

டாஸ்மாக்கிற்கு இல்லாத கட்டுப்பாடுகள் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏன்? - மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் டாஸ்மாக் கடை

மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத நிலையில், சுபநிகழ்ச்சியான திருமணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரியல்ல என திருமண மண்டப உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Why are there restrictions on marriage functions that Tasmac does not have?

author img

By

Published : Apr 9, 2021, 4:57 PM IST

சென்னை: தமிழ்நாடு அனைத்து திருமண மண்டப உரிமையாளர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அதன் மாநில தலைவர் ஜான். அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தியேட்டர், கேளிக்கை விடுதி உள்ளிட்டவை 50 விழுக்காடு இயக்கும் போது திருமணத்திக்கு மட்டும் 100 பேர்பங்கேற்க வேண்டும் என்பது நியாயம் இல்லை. இதனால் 25 லட்சம் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

திருமண மண்டபங்களை கட்டுவதற்காக 95 விழுக்காடு கடன் பெற்று, அதற்காக மாதாமாதம் வட்டி செலுத்தி வருகிறோம். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்காத நிலையில், திருமணத்திற்கு 100 பேர் என்பது எப்படி பொறுந்தும். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். சொத்துவரி, குடிநீர் வரி என அனைத்தையும் செலுத்தி கொண்டுள்ளோம்.

சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் ஏன்?

அரசே கரோனாவை பரப்பிவிட்டு திடிரென கடுமையான விதிகளை விதிப்பது நியாயமா? பலர் கடந்த வருட திருமணத்தை ரத்து செய்து விட்டு இப்பொழுது தான் மீண்டும் வைத்துள்ளனர். இந்த முறையும் தங்களுக்கு கிடைத்த ஆர்டர்களை ரத்து செய்யும் உத்தேசம் இல்லை. எனவே, தமிழ்நாடு தலைமை செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு தரவுள்ளோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.