திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (மே.7) முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல் அனைத்து சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை பட்டியல்:
புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை பட்டியலில் 15 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கபட்டுள்ளது. மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்ற சீனியர்களும் இடம்பிடித்து உள்ளனர். குறிப்பாக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த 8 நபர்கள் அமைச்சரவை பட்டியலில் உள்ளனர்.
மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம்:
சென்னை - 3
கடலூர் - 2
திண்டுக்கல் - 2
திருச்சி - 2
திருப்பூர் - 2
தூத்துக்குடி - 2
மதுரை - 2
விருதுநகர் - 2
விழுப்புரம் - 2
புதுக்கோட்டை - 2
ஈரோடு - 1
கரூர் - 1
கன்னியாகுமரி - 1
காஞ்சிபுரம் - 1
சிவகங்கை - 1
திருவண்ணாமலை - 1
திருவள்ளூர் - 1
நாமக்கல் - 1
நீலகிரி - 1
ராமநாதபுரம் - 1
பெரம்பலூர்- 1
ராணிப்பேட்டை- 1
வேலூர் - 1
இதில் கோயம்புத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக சார்பில் ஒருவர் கூட வெற்றி பெறாததால் அமைச்சரவை பட்டியலில் இடமில்லை.
அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்கள்:
செங்கல்பட்டு
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
கள்ளக்குறிச்சி
சேலம்
கோவை
அரியலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
தேனி
திருநெல்வேலி
தென்காசி
டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திமுக கொறடா பதவியும், கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டிக்கு சபாநாயகர் பதவியும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ரீதியாக பிரதிநிதித்துவம்:
முக்குலத்தோர் - 4
கொங்கு வெள்ளாள கவுண்டர் - 4
வன்னியர் - 4
நாடார் - 3
ரெட்டியார் - 3
பட்டியலினத்தவர் - 3
யாதவர், நாயுடு - தலா 2
முதலியார், இஸ்லாமியர் - 2
படுகர் - 1
செட்டியார், உடையார் - தலா 1
இதையும் படிங்க: திமுக அமைச்சர்களாக மாறிய முன்னாள் அதிமுகவினர்!