ETV Bharat / state

'பாடலாசிரியர் சினேகன் தன்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்' - குமுறும் சின்னத்திரை நடிகை - ஜெயலட்சுமி

'சினேகம்' அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்து வருவதாக சின்னத்திரை நடிகை மீது கவிஞர் சினேகன் அளித்த புகாரைத்தொடர்ந்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக கவிஞர் சினேகன் மீது பாஜக பிரமுகரும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த சினேகம் அறக்கட்டளை யாருடையது?

author img

By

Published : Aug 8, 2022, 7:04 PM IST

சென்னை: திரைப்படப் பாடலாசிரியரான சினேகன் கடந்த 5ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி என்பவர், தான் நடத்தும் அறக்கட்டளை பெயரான 'சிநேகம்' என்ற பெயரைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி கேள்வி கேட்பதாகவும் அவர் கூறினார். இதனால் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பாடலாசிரியரான சினேகன் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுத்துள்ளதாக நடிகை ஜெயலட்சுமி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜெயலட்சுமி, ''கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 'சினேகம்' என்ற பெயரில் அங்கீகாரம் பெற்று அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், தனது அறக்கட்டளைக்கென பிரத்யேக வங்கிக்கணக்கு, பான் கார்டு இருக்கும்போது, நடிகர் சினேகனின் அறக்கட்டளைக்கு செல்ல வேண்டிய நன்கொடை, தனக்கு எப்படி வரும்'' என கேள்வி எழுப்பினார்.

தன்னைக் குறிவைக்கக் காரணம் என்ன? மேலும் அறக்கட்டளையின் பெயரைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறிய சினேகன் ஆதாரங்களை காண்பித்து நிரூபிக்க வேண்டுமெனவும், ஒரே பெயரில் அறக்கட்டளையின் அங்கீகாரம் பெறலாம் எனவும்; சினேகம் என்ற பெயரில் பலர் அறக்கட்டளை நடத்தி வரும் நிலையில் தன்னை மட்டும் குறிவைத்து சினேகன் புகார் அளித்துள்ளது என்ன நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் பாடலாசிரியர் சினேகன் அறக்கட்டளை பெயர் தொடர்பான பிரச்னையை மட்டும் பேசாமல், தான் பண வசூலில் ஈடுபடுவதாகவும், தன் மீது அதிகப்படியான புகார்கள் இருப்பதாகவும் அவதூறு பரப்பும் வகையில் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார். பாடலாசிரியர் சினேகன் திமுகவிற்கு விலை போய்விட்டாரா அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாக பேசுகிறாரா என்ற சந்தேகம் நிலவுவதாக அவர் கூறினார்.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார் அளித்த பாடலாசிரியர் சினேகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகம், தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

'பாடலாசிரியர் சினேகன் தன்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்' - குமுறும் சின்னத்திரை நடிகை

மேலும் நடிகர் கமல்ஹாசனின் படத்தை திமுக தான் விநியோகிப்பதாகவும், திமுகவின் ’பி’ டீமாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: நாங்கள் சொல்வதை கேட்க தான் அவர்கள்.. நிர்மலா சீதாராமனுக்கு துரைமுருகன் பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.