ETV Bharat / state

நீர்நிலையில் மருத்துவக் கழிவுகளை கொட்ட அனுமதி அளித்தது யார்?... அரசிடம் நீதிமன்றம் கேள்வி? - சென்னை உயர்நீதிமன்றம்

மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 20, 2023, 5:44 PM IST

சென்னையைச் சேரந்த உதயகுமார் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலை கிராமத்தில் 30 ஏக்கர் பரப்பளவுள்ள "நைனா ஏரி"யில் சமூக விரோதிகள் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் கட்டுமானப் பொருட்களையும், குப்பைகளையும் கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

திருநீர்மலை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரியை சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். கால்நடைகள் மற்றும் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கான ஏரியை புனரமைக்க வேண்டும் என 2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் தொன்மை மாறாமல் ஏரியை புனரமைக்க வேண்டும் என 2015இல் உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் தாம்பரம் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை. தனியார் எம்.சாண்ட் நிறுவனம் 300 அடி ஆழத்திற்கு மணல் எடுத்துள்ளது. இதனால் கோடை காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்நிலையில், தற்போது அனுமதியின்றி அரசு மருத்துவமனை மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுவதால் குடிநீர் மாசுபாடு, மூச்சுத்திணறல் உள்ளிட்டப் பல்வேறு நோய்கள் காரணமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன் ஏரியைப் புனரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்புத்தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரதச்சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீர் நிலைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், கரோனா காலத்தில் கடுமையானப் பாதிப்புகளை சந்தித்தபோதும், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில் அரசு இன்னும் பாடம் கற்கவில்லை. நீர் நிலையில் மருத்துவக்கழிவுகளை கொட்ட அனுமதி அளித்தது யார் எனவும், என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது எனவும்; யார் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் கேள்வி எழுப்பினர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநகராட்சி சார்பில் கழிவுகளை அப்புறப்படுத்த தனியாரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனப் பதிலளித்தார். இதனையடுத்து, மருத்துவக் கழிவுகளை கொட்டியது யார்? எனப் பதிலளிக்க அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை மதியம் தள்ளி வைத்தனர்.

இதையடுத்து, மதியம் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை இரண்டு வாரங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அப்புறப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: TN budget 2023: அரசு வழங்கும் மானியங்களுக்காக மின்சாரத்துறைக்கு ரூ.14,063 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.