ETV Bharat / state

பேரறிவாளன் கருணை மனு - மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு! - chennai latest news

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த கருணை மனுவிற்கு பதிலளிக்க மாநில தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பேரறிவாளன் கருணை மனு
பேரறிவாளன் கருணை மனு
author img

By

Published : Oct 1, 2021, 9:12 AM IST

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”கடந்த 2019ஆம் ஆண்டு ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினேன். அந்த மனுவின் நிலை என்ன. தன்னை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவையின் பரிந்துரையின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு என்ன தடை உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி தன் கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வழக்கு தொடர்பான விவரங்களைத் தர வேண்டும் என தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் அலுவலகத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பித்தேன்.

அதன் மீது எந்தப் பதிலும் அளிக்காததால், இதே கேள்விகளுடன் மத்திய தகவல் ஆணையத்திற்கு மனு அளித்தேன். அந்த மனு மாநில தகவல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை அம்மனு மீது எந்தவித பதிலும் வராததால், தனது மனுவுக்கு பதிலளிக்கும்படி மாநில தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மாநில தகவல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க : இரு விரல் பரிசோதனை: மகளிர் ஆணையம் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.