ETV Bharat / state

சென்னையில் இன்னும் என்னென்ன வசதிகள் வேண்டும்? - கருத்து தெரிவிக்கலாம் வாங்க! - சென்னைக்கு என்னென்ன வசதிகள் வேண்டும்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 3வது பெருந்திட்டத்துக்கான கருத்து கேட்பு நிகழ்வை, அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

Minister Sekar babu
அமைச்சர் சேகர்பாபு
author img

By

Published : Apr 9, 2023, 4:37 PM IST

சென்னை பெருநகரின் முதல் பெருந்திட்டம் 1976-ம் ஆண்டும், இரண்டாம் பெருந்திட்டம் 2008-ம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு மூன்றாம் பெருந்திட்டத்தினை (2026-2046) தயாரிக்க உள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது.

மூன்றாவது பெருந்திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டு, சென்னை பெருநகரில் 29 மண்டலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கலந்தாலோசனை கூட்டங்கள் நடத்தி, அவர்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாவது பெருந்திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, கையேட்டினை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் நேரடியாகவும், வலைதளங்கள் மூலமாகவும் கருத்து கணிப்புகளை கேட்கும் முயற்சியினை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) முன்னெடுத்துள்ளது. பொது மக்கள் QR Code மற்றும் ஆன்லைன் மூலமாக கருத்துக்களை தெரிவிக்கலாம்” என கூறினார்.

இந்த தொலைநோக்கு ஆவணத் தயாரிப்பிற்கு கருத்து தெரிவிக்க விரும்புவோர், ஆங்கில படிவத்தினை பூர்த்தி செய்ய https://forms.gle/1SaapSDXXyyAmbBK7 , தமிழ் படிவத்தினை பூர்த்தி செய்ய https://forms.gle/4cQVYKFekpia4upr9 அல்லது www.cmavision.in என்ற இணையதள பக்கத்தில் கருத்துகளை தெரிவிக்கலாம்.

இதையும் படிங்க: பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற கால அவகாசம் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.