ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் செல்லவிருந்த விமானங்கள் தாமதம் - காரணம் என்ன? - Chennai Airport news in tamil

Flights late takeoff in chennai airport: தமிழ்நாடு ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் செல்லவிருந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 12:14 PM IST

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 24) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 8.25 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கோவைக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 9.45 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருச்சிக்கும் செல்வதற்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இவ்வாறு ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விஐபி கேட் 6ஆம் எண் வழியாக வந்து விமானத்தில் ஏற இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக கவனத்துடன் இருந்தனர். இருப்பினும், இரு விமானங்களுக்கும் இடையேயான புறப்பாடு நேரங்களுக்கு இடையே வித்தியாசம் இருந்ததால் நேர மேலாண்மை உடன் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில், கோயம்புத்தூரில் இருந்து வழக்கமாக காலை 7.25 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மீண்டும் காலை 8.25 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டுச் செல்லும். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விட்டது.

ஆனால், அந்த விமானத்தை இயக்கி வந்த விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த விமானி தன்னால் விமானத்தை இயக்க முடியாது என்று கூறி உள்ளார். இதனையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ஆளுநர் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை இயக்க மாற்று விமானியைத் தொடர்பு கொண்டனர்.

இதனையடுத்து ஆளுநர் செல்ல இருந்த விமானம் தாமதமாக 9.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் பரபரப்பான சூழலுக்கு உள்ளாகினர். உடனடியாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தகவல் தெரிவித்து, ஆளுநரை தாமதமாக விமான நிலையத்திற்கு வரும்படி அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தால் மாற்று விமானி ஏற்பாடு செய்யப்பட்டு, அவர் காலை 9.45 மணிக்கு விமானத்தில் வந்து ஏறினார். அதன் பின்பு ஆளுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு விமானத்தில் வந்து ஏறினார். இதனையடுத்து ஆளுநர் பயணிக்கும் விமானம் ஒரு மணி நேரம் 42 நிமிடங்கள் காலதாமதமாக காலை 10.07 மணிக்கு சென்னையில் இருந்து கோவை புறப்பட்டுச் சென்றது.

அதேபோன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி செல்ல வேண்டிய விமானமும் 45 நிமிடங்கள் தாமதமாக திருச்சி புறப்பட்டுச் சென்றது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து வழக்கமாக காலை 8.15 மணிக்கு சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் செல்லும்.

ஆனால், அந்த விமானம் கோழிக்கோட்டில் இருந்து இன்று தாமதமாக சென்னை வந்தது. அதன் பின்பு விமானத்தை சுத்தப்படுத்தி, பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல இருந்ததால் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனிடையே, விமான நிலையத்திற்கு வந்துவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், விமான நிலைய ஓய்வு அறையில் சிறிது நேரம் இருந்தார். அதன் பின்பு விமானத்தில் வந்து ஏறினார்.

இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆளுநர், முதலமைச்சர் பயணிக்க இருந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதையும் படிங்க: சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.