ETV Bharat / state

O.Panneerselvam: நாடாளுமன்ற தேர்தலில் போட்டி; ஓபிஎஸ் அறிவிப்பின் பின்னணி என்ன..?

Ops latest News: அதிமுகவில் தன்னை பாஜகவினர் இணைத்து விடுவார்கள் என ஓபிஎஸ் செயல்பட்டு வந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறுவதற்கான பின்னணி என்ன? என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:23 PM IST

ops-says-we-will-contest-the-parliamentary-elections

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடும் என மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனையின் போது ஓபிஎஸ் அறிவித்திருந்தார். அதிமுகவில் தன்னை பாஜகவினர் இணைத்து விடுவார்கள் என ஓபிஎஸ் செயல்பட்டு வந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறுவதற்கு பின்னணி என்ன என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவில் தன்னை நீக்கியது செல்லாது என தொடர்ந்து நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை நாடிய ஓபிஎஸ்ஸிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இறுதியில் பாஜகவினர் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து விடுவார்கள் என ஓபிஎஸ் நம்பியிருந்தார். ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மேலிடம் பல முறை அழுத்தம் கொடுத்தும் அதை அவர் மறுத்து விட்டார். அதிமுகவில் நீக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார்.

தமிழகம் முழுவதும் சுமார் 70 விழுக்கட்டிற்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமனம் செய்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நீதிமன்ற உத்தரவு காரணமாகவும், பாஜகவின் அழுத்தம் காரணமாகவும் வேட்பாளரை ஓபிஎஸ் திரும்ப பெற்றார். ஒருங்கிணைந்த அதிமுக-வைத்தான் பாஜக விரும்புகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு அளவுக்கு மேல் பாஜக-வால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. காரணம், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு பாஜகவினர் அச்சமடைய செய்துள்ளது. இதனால், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவின் ஆதரவு பாஜகவிற்கு தேவைப்படுகிறது. இருந்தாலும் கடைசி நிமிடத்தில் மாறலாம் என ஓபிஎஸ்க்கு பாஜக நம்பிக்கை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் புறக்கணிப்பு, அண்ணாமலை பாதயாத்திரையில் புறக்கணிப்பு என பாஜக தொடர்ந்து ஓபிஎஸ்ஸை புறக்கணித்ததை அவரது அணியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், பாஜகவையும், அண்ணாமலையையும் ஓபிஎஸ் அணியினர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் ஒரே சமூதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை ஆதரிக்கிறார் என ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் விமர்சனம் செய்திருந்தார்.

பல விவகாரங்களில் ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டதா என்று கேள்வி எழுப்பப்படும் போதும் கடைசி வரைக்கும் ஓபிஎஸ்ஸை பாஜக முழுமையாக கைவிடாது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வந்தனர். எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் கைகோர்த்தார். மேலும் தனக்கான பலத்தை நிரூபிக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் மாநாடு, டிடிவி தினகரனுடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்ககோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரின் நீக்கத்தால் தென் மாவட்டங்களில் பல சவால்கள் இருந்தன. அதனால் தனக்கான செல்வாக்கை நிரூபிக்கும் விதமாகவும் தென் மாவட்டங்களில் ஆதரவை அதிகரிக்கும் விதமாகவும் மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தினார். இதனால், எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தும் அதே சமயம் சென்னையில் ஓபிஎஸ் அணி சார்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: மதுரை அதிமுக மாநாட்டில் உணவு வீணாக்கப்பட்ட விவகாரம் - ஜெயக்குமார் ரியாக்‌ஷன் என்ன?

ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், "மதுரை மாநாடு பண மூட்டைகளை கொண்டு நடத்தப்படும் மாநாடு. வந்த தொண்டர்களுக்கு உணவு கூட சரியாக வழங்கவில்லை. நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் போட்டியிடுவோம். மீதமுள்ள நிர்வாகிகளை நியமனம் செய்து, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும்" என கூறினார். இந்த ஓபிஎஸ்ஸின் பேச்சின் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓபிஎஸ் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதே சமயம் டிடிவி தினகரன் தரப்பில் ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என கூறியிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் முடிவை ஓபிஎஸ் எடுத்ததற்கான பின்னணி என்ன என்று அவர் தரப்பில் இருக்கும் நிர்வாகியிடம் விசாரித்த போது, “ஆரம்பத்தில் இருந்தே நம்பிகை வைத்த ஓபிஎஸ்ஸை பாஜக கழட்டி விட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற்றார். பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம் என கூறினார். பல இடங்களில் இன்னும் நாங்கள் ஓபிஎஸ் கைவிடவில்லை என பாஜகவினர் கூறுகின்றனர். இதே போன்றுதான் அனைத்து விவகாரங்களிலும் இறுதியில் பாஜக கைவிட்டு விடுகிறது.

அதனால், நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக கைவிட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால், நாமே முன்கூட்டியே கழண்டு கொள்வது நல்லது என்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளளோம் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் நம்முடைய ஆதரவு இல்லாமல் அதிமுக-பாஜக கூட்டணியால் வெற்றிபெற முடியாது என ஓபிஎஸ் நம்புகின்றார். இதற்கு கூடுதலாக பலம் சேர்க்கும் விதமாக டிடிவி தினகரனும் ஓபிஎஸ் உடன் இணைந்துள்ளார். தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய 13 தொகுதிகளை குறி வைத்து வேலை செய்ய ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இதனால், தனது செல்வாக்கை பாஜகவினருக்கும், அதிமுகவினருக்கும் உணர வைக்க முடியும் என்பது தான் ஓபிஎஸ்ஸின் திட்டம். அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரிய ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்” என கூறினார்.

இது குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “எடப்பாடி பழனிசாமி நினைப்பது போல ஓபிஎஸ் அப்படியே அமைதியாக செல்ல மாட்டார். தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவே இல்லை. எடப்பாடி பழனிசாமி அராஜகமாக ஓபிஎஸ்ஸை நீக்கியதால் அவர் மீது மக்களுக்கு ஒரு அனுதாபம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஒரு அணியாக அமைத்து போட்டியிட்டால் எடப்பாடி பழனிசாமி படுதோல்வி அடைவார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் இருப்பார். தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் ஓபிஎஸ்ஸை ஏற்றுக்கொள்வார்கள்” என கூறினார்.

இதையும் படிங்க: INDIA கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் - லாலு பிரசாத் யாதவின் பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.