ETV Bharat / state

'தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்தும் பணியில் சவாலை சந்திக்குமா?' அரசுத் தேர்வுத்துறை

author img

By

Published : May 13, 2020, 10:45 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதிலும், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் மேற்கொள்வது தற்போதைய சூழ்நிலையில் அரசு தேர்வுத் துறைக்கு மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது.

10th school
10th school

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் இந்தச் சூழலில், தேர்வு நடத்துவதும், விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிப்பது என்பது தேர்வுத் துறையின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.

மார்ச் 27ஆம் தேதி முதல் நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (மே.12) வெளியிட்டார். இதில், ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 27ஆம் தேதி முதல் தொடங்கப்படும். அதேபோன்று நிலுவையில் உள்ள 11ஆம் வகுப்பு தேர்வு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு நடத்தும் தேதியையும் அவர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், நடைமுறையில் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தான் கேள்வியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 8லட்சத்து 50 ஆயிரம் பள்ளி மாணவர்கள் உட்பட தனித்தேர்வு மாணவர்களையும், சேர்த்து 9 லட்சம் பேருக்கு தகுந்த இடைவெளியைப் பின்பற்றி தேர்வுத்துறை எவ்வாறு தேர்வை நடத்தி முடிக்கும்.

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 500க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுத வருவார்கள், இவர்களுக்கு தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பதற்கான விதிமுறைகள் என்ன? போக்குவரத்து பயன்பாட்டிற்கு வராத நிலையில் மாணவர்கள் எப்படித் தேர்வு மையங்களுக்கு செல்வார்கள்.

மாநிலம் முழுவதும் மூவாயிரத்துக்கும் அதிகமான தேர்வு மையங்களை சுத்தம் செய்வது, கிருமிநாசினி தெளிப்பது போன்ற பணிகளும் நடைபெறவுள்ளன. மாணவர்களில் யாராவது ஒரு சிலருக்கு கரோனா பாதிப்பு உறுதியானால் மற்ற மாணவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

இந்த நெருக்கடியை தேர்வுத்துறை எப்படி கையாளப் போகிறது என ஆசிரியர்களும், பெற்றோர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளன. 11, 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தலா 70க்கும் அதிகமான மையங்களில் நடைபெறும்.

ஒவ்வொரு மையத்திலும் 400க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் ஆசிரியர்கள் எப்படி விடைத்தாள்களை திருத்த சம்மதிப்பார்கள். விடைத்தாள் திருத்தும் பணியை பொறுத்தவரை ஆசிரியர்களுக்கு முழுமையான பாதுகாப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டால் மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியும் என, ஏற்கனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

கரோனா பயம் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது தேர்வுத்துறையினர் குற்றச்சாட்டாகும். எனவே, முதல் கட்டமாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களின் சம்மதத்தை பெற தேர்வுத்துறை முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய, சூழலில் தேர்வை உடனடியாக நடத்த வேண்டுமா; அல்லது தேர்வை விட மாணவர்கள் உயிர் முக்கியம் என்ற கருத்தை கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இனிவரும் காலத்தில் கரோனா அதிகரிக்கத் தொடங்கினால், தேர்வை நடத்துவதும், விடைத்தாள் திருத்தும் பணிகளை நடத்தவதும் மிகப்பெரிய சவாலாகத்தான் தேர்வுத்துறை எதிர்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஜெயஸ்ரீ கொலை வழக்கு: நியாயம் கேட்டு போராட முயன்ற வழக்கறிஞர் நந்தினி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.