ETV Bharat / state

'ஆஷா பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - latest chennai news

ஆஷா பணியாளர்கள் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் வகையில் இலவச பேருந்து பயணச் சீட்டு வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By

Published : Oct 16, 2021, 7:03 PM IST

தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை சேப்பாக்கத்திலுள்ள அண்ணா அரங்கத்தில் மாநில கோரிக்கை மாநாடு நடைபெற்றது.

இதில் 1000க்கும் மேற்பட்ட பெண் மருத்துவ களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அரசு பேருந்துகளில் ஆஷா பணியாளர்கள் அனைத்து நகர அரசு பேருந்துகளிலும் இலவசமாகப் பயணிக்கும் வகையில் இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஒன்றிய அரசிடம் ஆஷா பணியாளர்கள் குறித்த கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சரிடத்தில் எடுத்துரைத்து முடிந்தவரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

ஆஷா தொழிலாளர்கள் 2,650 குடும்பங்களை திருப்திப்படுத்தும் அளவிலான காரியங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக இன்றுவரை 5000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதலாக 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆஷா பணியாளர் சங்கத்தில் 12 ஆம் வகுப்பு வரை பயின்று முடித்த 42 வயதுக்குள்பட்ட பெண்களைக் கிராம சுகாதார செவிலியராக ஆண்டுக்கு 60 பேர் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சி வழங்கி, நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஆஷா பணியாளர்கள் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் வகையில் இலவச பேருந்து பயணச் சீட்டு அடையாள அட்டையுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை நெருங்கள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு மானியம் வழங்க வேண்டும் - திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.